மிளகாய் கடித்து
பழையதும் பருப்புத்தொகையலும்
உண்டு களித்திருக்கிறாயா..
பனங்கொட்டை வெட்டியெடுத்து
பருப்பும் தான் ருசித்ததுண்டா..
தொண்டைக்கதிர் உருவி
பால்நெல்லை ருசித்ததுண்டா..
பனங்குருத்து வெட்டியெடுத்து
பங்குப் போட்டுத் தின்றதுண்டா..
கூட்டாஞ்சோறு ஆக்கி
கூடித்தான் களித்ததுண்டா..
கடலைச்செடி புடுங்கி
திகட்ட திகட்ட தீர்த்ததுண்டா..
புளியம்பிஞ்சோடு உப்பு
தோய்த்து புல்லரித்ததுண்டா..
அடைமழையில் உளுந்து
வறுத்து வாடை போக்கியதுண்டா..
அயிறைக்குஞ்குகளை அரைவேக்காட்டில்
ஆவிப்பறக்க ருசித்ததுண்டா..
அடப்போங்கடா நீங்களும்
உங்க மெனு கார்டும்..
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
மிகவும் எளிமையாக எளிமையான கிராமத்து இயற்க்கை உணவின் சிறப்பைச் சொல்லி ரசிக்கவும் ருசிக்கவும் வைத்துள்ளீர்கள்!
இவ்வளவு ஏன்? அருகம்புல்லின் நுனிப்புல்லை உருவியெடுத்து அதன் இளம்தன்டை நறுக்கிச் சுவைப்பது இன்றும் இனிமையே!!!!
நன்றி கவுதமன் அவர்களே,
நகரத்தின் நரகத்தில்
தொலைத்த என் கிராமத்து
வாழ்க்கையை அசை போடும்
சிறு கவிதை..
Post a Comment