Saturday, September 29, 2007

உண்மையும் நானும்..

நெருப்பினில் தோய
நேரம் வந்துவிட்டது..
உருகாமல் இங்கே கருகிவிடக்கூடும்.
உண்மை உறைப்பின் அதிரக்கூடுமோ…
அன்றி ஏளனம் செய்வாயோ
முற்ச்சொன்ன பொய்களும் புரட்டுக்களும்
பல்லிளிக்கக் கூடுமோ..
பின் எது தடுக்கிறது..
தன்மானத்திற்கும் வறட்டு கெளரவத்திற்குமான
தடுமாற்ற கணங்களில்
உண்மையும் நானும்
மௌனமாய்..

2 comments:

Agathiyan John Benedict said...

சுருக்கமாகவும், சிறப்பாகவும் இருக்கிறது உங்களது கவிதைகள். வாழ்த்துக்கள்.

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in